சிக்கனத் திருமணத் திட்டம்

மாவட்டந்தோறும் செயல்படப் போகிற சுயமரியாதைத் திருமண நிலையங்களில், திருமண மண்டபம், ஒலிபெருக்கி, இருக்கைகள், பூமாலைகள், பேச்சாளர்கள், உணவு உள்பட அய்ம்பது பேர்கள் கலந்து கொள்ள ரூபாய் அய்யாயிரம் மட்டுமே!

தற்சமயம் செயல்படும் மாவட்டங்கள்: சென்னை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், கீழப்பாவூர், உரத்தநாடு, தருமபுரி முதலியன.

இத்தனை சிறப்பான அம்சங்களையும், செயல்பாடுகளையும் கொண்ட சுயமரியாதைத் திருமண நிலையம் தமது தமிழர் தலைவர் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் மட்டும் இயங்கி வந்த இத்திருமண நிலையம் மாநில அளவில் மாவட்டங்கள் தோறும் அவர்களே முன்வந்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்கள் என்பதனை அறிவித்துக் கொள்கிறேன்.

மத மறுப்புத் திருமணம் என்ற முறையிலும் மணமக்களை நிலையத்தின் மூலமாக தேர்ந்தெடுத்து இசுலாத்தையும், கிருத்துவத்தையும், இந்துவையும் இணைக்கும் வரலாறு படைக்கின்றது.

மேலும் மாவட்ட வாரியாக செயல்படும் திருமண நிலையங்கள் சிறப்பாக செயல்பட இயக்கக் குடும்பங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- திருமகள் இறையன், மாநில அமைப்பாளர்.