பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த காலங்களில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியுள்ளது. இன்றைய சூழலில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் தேவை கருதி, "மன்றல்" எனும் பெயரில் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவை, கடந்த 2012 முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வருகிற 29-05-2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் "மன்றல்" நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.